பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

Posts Tagged ‘வாழ்த்து’

திருமண வாழ்த்து

Posted by பாரதி சே மேல் ஏப்ரல் 4, 2009

2257362944_88f61eb8f1

விடுமுறை பெற்று

விழாமுடித்து, விடைபெற வரவில்லை.

விழி நிறைத்து வாழ்த்து சொல்லி

வழியனுப்ப வரவில்லை.

விலா எலும்பாய் விளங்கி நின்று

விழு முன்னே தோள் கொடுக்கும் தோழர்களாய்

சரித்திரப் பக்கங்களில் உயிர்மெய்

எழுத்துக்களால் உயிர்த்து வரும்

சாதனைதனை வெற்றிச் சிகரம் எடுத்துப்

புறப்படும் நண்பர்களுக்கு

எங்கள் சந்தோஷத்தில்

சரிபாதிக்கு மேலும்,

அனுபவத்தில் அடைந்ததனைத்தும்,

அச்சுப் பிறழாமல் கொடுத்து,

அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து,

பண்பும், பயனும் குறையாமல் விளைய,

இல்வாழ்வில் இன்பங்கள் எல்லாம்

இடையறாது செழிக்க

இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்..

இனிய திருமண வாழ்த்துக்கள்!!

Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

பூக்குவியலுக்குப் பதிலாய்…

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 13, 2008

பூக்குவியலுக்குப் பதிலாய்...

பூக்குவியலுக்குப் பதிலாய்...

சந்தியா ந‌ல்நினைவுகள்(நன்னினைவுகள்)

சந்தியா ந‌ல்நிகழ்வுகள்(நன்னிகழ்வுகள்)

கோபம்சந்தியா குணத்தினில்

காலத்தோடு வந்திறங்கிடவும்,

இருள்சந்தியா சந்திரனின்

சங்கடம் தீர்க்கும் ஒளி போல,

வரும் இடர்தனைச்

சிந்தையால் விலக்கிச்

சோர்வுசந்தியா

மனவலிமை பெற்றிடவும்,

வரும் சந்ததியில்

அறிவியல் சங்கதியுடன்

மடமைசந்தியா

மறுமலர்ச்சி வகுத்திடவும்,

இனி பிரிந்தாலும் மனதில்

பிரிவுசந்தியா

நிலைநாடும்

சந்தியாவின் நண்பர்களிடமிருந்து

மதிப்புசந்தியா

வார்த்தைகளில்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

-(ஜீலை 2008, வார்த்தை சந்திகளில் விடைபெற்ற

தூக்கம்சந்தியா ஓர் நள்ளிரவில்.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »