பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

ப்ரூட்டஸே, புகழ் பெறுக

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 8, 2008

brutus

தன் முதுகின் அழுக்கறியார்

தானே தருமன் என்றுரைப்பார்

தவறுக்கெல்லாம் விளக்குரைப்பார்

தனக்கென்றால் கருத்துரைப்பார்

தன்நிலை பிறர்க்கென்றால்

தரணி கெட்டதென்பார்

தரங்கெட்ட மனிதர் என்பார்

தயங்காது பழித்திடுவார்

தன்மானம் விற்றேனும்

தன்னிலை நாட்டிடுவார்

தானம் பெற மானம்

தயங்காது விலைகொடுப்பார்.

Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

தரை மேல் தாரகைகள்

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 8, 2008

flight

முதல் பயணம்

வியப்பு தரவில்லை.

படிகள் வழிகளுக்காகக்

காத்துக் கொண்டிருந்தன.

ஆங்கிலம் பெண்குரலில்

அழகாய்ப் பிரசவித்துக்

கொண்டிருந்தது.

கூராய் விரைந்து கிளம்பிய

பாதையின் திசை விண்ணில்

பாலம் அமைத்துச் சென்றது.

விரைந்து சுழன்ற

விசிறிகளின் விசையால்

பூமி கீழே சென்றது.

இதோ, நட்சத்திரங்கள் பூமியில்,

நாங்கள் சற்று மேலே!

இடையிடையே,

காற்றுக்குமிழிகள் வந்து

காதடைத்து நின்றன.

ஒவ்வொரு விழுங்கலிலும்

ஒரு காற்றுக்குமிழி

கரைந்து கொண்டிருந்தது.

உயிரற்ற ஒரு கூடு

உயிர்களுடன் உயரப்

பறந்து கொண்டிருந்தது.

பல மனங்கள் ஏனோ

பல்வேறு திசைகளில்

பரிச்சயித்தினை நிராகரித்துப்

பறந்து கொண்டிருந்தன,

ஆனால் கீழ் நோக்கியே!

முதன்முதலாய் ஒரு பயணம்

கேசம் சேதப்படாமல்….

– (நவம்பர் 2007, விண்ணைத் தொடும் ஆசையில் ஓர் விமானப் பயண இரவில்.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

அன்பின் வலியது உயிர்நிலை

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 14, 2008

அன்பின் வலியது உயிர்நிலை

அன்பின் வலியது உயிர்நிலை

நான் கண்ணீர் விடும்பொழுது

கண் துடைக்கக் கைக்குட்டை வேண்டாம்,

கண்ணீரில் கரைந்தொழுக

வியர்வை வாசம் கமழும் உன் தோள்கள் போதும்.

என் மகிழ்ச்சியில் பகிர்ந்துகொள்ள

உன் சிரிப்புகள் வேண்டாம்,

உன் அருகாமையின் இருப்புகள் போதும்.

என் தோல்வியைக் கரைகடக்க

உன் ஆறுதல் வார்த்தைகள் வேண்டாம்,

என் கரம் பற்றிக் கேசம் கோதும்

உன் மௌன மொழிகள் போதும்.

இவையெல்லாம் நிகழ

மீண்டும் மறந்துவிடும் குழந்தைப் பருவம் வேண்டாம்,

மறந்தாலும் இறந்துவிடும் முதுமையே விரைவில் வேண்டும்.

(ஜீலை 2007, நினைவுகளின் நிழலோடையில் நிஜம் தேடும் நிதர்சனத்தில்.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

இரவு விற்பன்னர்கள் / NIGHT SELLERS

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 14, 2008

இரவு விற்பன்னர்கள்

இரவு விற்பன்னர்கள்

டாலர்களின் பகல்களுக்காய்

இங்கே

ரூபாய்களின் இரவுகள்

விழித்துக் கொண்டிருக்கின்றன.

(ஜீன் 2007, அலுவல் நேர அவதியில்.)

————————————

NIGHT SELLERS / KNIGHTS OF LIGHTS

Nights of Rupees

are awaiting for the

lights of Dollars.

(June 2007, Sworned by the suppression due to stress making shifts.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

ஒன்று?

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 13, 2008

ஒன்று?

ஒன்று?

அனைத்துமே ஒன்றுதான்.

அந்த ஒன்று சில சமயம்

அனைத்துமாய் இருப்பதில்லை.

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 2 Comments »

பூக்குவியலுக்குப் பதிலாய்…

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 13, 2008

பூக்குவியலுக்குப் பதிலாய்...

பூக்குவியலுக்குப் பதிலாய்...

சந்தியா ந‌ல்நினைவுகள்(நன்னினைவுகள்)

சந்தியா ந‌ல்நிகழ்வுகள்(நன்னிகழ்வுகள்)

கோபம்சந்தியா குணத்தினில்

காலத்தோடு வந்திறங்கிடவும்,

இருள்சந்தியா சந்திரனின்

சங்கடம் தீர்க்கும் ஒளி போல,

வரும் இடர்தனைச்

சிந்தையால் விலக்கிச்

சோர்வுசந்தியா

மனவலிமை பெற்றிடவும்,

வரும் சந்ததியில்

அறிவியல் சங்கதியுடன்

மடமைசந்தியா

மறுமலர்ச்சி வகுத்திடவும்,

இனி பிரிந்தாலும் மனதில்

பிரிவுசந்தியா

நிலைநாடும்

சந்தியாவின் நண்பர்களிடமிருந்து

மதிப்புசந்தியா

வார்த்தைகளில்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

-(ஜீலை 2008, வார்த்தை சந்திகளில் விடைபெற்ற

தூக்கம்சந்தியா ஓர் நள்ளிரவில்.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

புறங்காரம்

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 13, 2008

23water-flame-fantasy04

முரண்பாடுகளின் முழுமையும் நானே!

முரண்டு முன்னெழும் முயற்சியும் நானே!

முதலாய் வரும் முடிவும் நானே!

முடிவில் எழும் முரசும் நானே!

முட்டிவிடும் முகடும் நானே!

முடியறியா முனியும் நானே!

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

கூட்டுக் கவிதை

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 3, 2008

பின் வருவது, தோழர் கேகே (கொண்டசாமி) அவர்களின் சமீபத்திய படைப்பான பாரமாய் அழுத்தும் விக்கிரமாதித்யச் சுமைஎனும் கவிதை தொகுப்பின் முகப்பு அட்டைக்கான கூட்டுக் கவிதை, எனது மற்றும் தோழர் இவான் அவர்களின் வரிகள்

 

புரண்டு விழும் நிகழ்வுகள்
புறமுதுகின் விலா எலும்புகளை
விகாரமாய் அழுத்த
யுகம் யுகமாய்த் தொடர்கின்றன
படபடத்து உடையும் கனவுகள்.
கனவுகள் குழைத்த வெம்மையில்
தலை நனைத்த தூரிகை,
தீற்றல்களாய் உயிரெழும் நினைவுத்தீ.

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

நினைவுச் சாரல்

Posted by பாரதி சே மேல் ஓகஸ்ட் 30, 2008

நினைவுச்சாரல

நினைவுச்சாரல

தேங்கி நின்ற நீர்நிலைகளில்

விழுந்த தூறல்கள் ஒவ்வொன்றிலும்

நினைவலைகள் விரிந்து சென்றன.

-(ஆகஸ்ட் 2008, அறையின் சாளரம் வழி அனாயசமாய்ப் புகுந்த ஈரக்காற்று விழி அள்ளிச் சென்று பார்வை மழையில் நனைத்த விநாடி.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

ஆசான்

Posted by பாரதி சே மேல் ஓகஸ்ட் 30, 2008

உயிர் கொடுத்து, அறிவில்

சாண் கொண்ட என்னை

வான் அளக்க வைத்ததால்

நீயே ஆசான்.

————–

பகுத்தறிவு விதைத்து பிரம்மனானாய்

அறிவில் வான் அளக்கச் செய்து வாமனனானாய்

அறியாமை அழித்து ஈசனானாய்..

————–

களிமண்ணும், கட்டைவிரலும்

ஏகலைவனாய் இருக்கலாம்.

நீயின்றேல், இன்று

சக இளைஞனும் களிமண்ணும்,

கட்டைவிரலுமாய் மட்டுமே

எதிர்ப்படலாம்.

————–

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »